Sunday, April 8, 2018

எண்ட்ரொபியான்



                                                               *                                                        
                                    என்ட்ரொபியான்

  சுற்றுப்புறத் தூசு, மாசு, துகள்களிலிருந்தும்,
    தீய காட்சிகளிலிருந்தும்  பத்திரமாய் பாதுகாக்க
    பரமன் தந்தருளிய  கண் இமையே, உன் மயில்ப் பீலி மயிரை
 குத்தூசியாய் கூர்மையாக்கி கண்ணுக்குள் பாய்ச்சி
 குத்திக்கிழிப்பது நியாயமா, பாதுகாக்கவேண்டிய
  படைவீரனே இம்சைபண்ணி ரஸிப்பது போல்.......!
 ரண சிகிச்சைகளுக்குப் பிறகும்
  விளையை நாசம் செய்யும் களையைப்போல்
    முன்னால் இருந்ததைவிட இன்னும் கூர்மையாய்
   மீண்டும் மீண்டும் கிளர்ந்தெழுந்து  உன் கைவரிசையைக்
  காட்டிகோண்டிருக்கிறாயே...
  டயலீஸ் செய்யும் சிறுநீரக நோயாளியைப்போல்,
  உனைப்பிழுது விலக்க வாரம் இருமுறை, மும்முறை
  மருத்துவ சாலை விரைய வேண்டிய கட்டாயம்......
    புற்று நோய்க்கு மருந்துண்டு, இதுக்கு வேறு
    ம்ருந்தில்லை”, என நாலு வைத்தியரும்
    இனி நம்புவுதற்கில்லைஎன்று கை விரித்த நிலை....
   வெளிச்சத்தில் கண் திறக்க விடாது
  கடுமையான் வலியில், இருட்டறை கைதியாய்,
    கண்ணீர் கடலில் முழுக வைத்து  உயிரை சுமையாக்கி
   சதா நேரமும் இவனைப் பகிடையாக்கி நீ செய்யும்
  இவ்வினோத விளையாட்டிலிருந்து-
  வினைடாட்டத்திலிருந்து விமோசனமே இல்லையா,
   இந்நாள் வரை கூடவே வாழ்ந், வளர்ந்த, நட்பு, உற்றம் சுற்றங்கள் சில,
  ஆறுதலும் ஆதரவும் அவசியமான நிராதரவு கட்டத்தில்
  ஓட்டைகாரணங்கள் சொல்லி ஒதுங்கிக்கொள்வது மட்டுமன்று,
  கூரம்புகளான குற்றச்சாட்டல்களால்
   குத்திக்கிழிப்பதைப் போலவா.........?!

                                  நீல பத்மநாபன்

 *என்ட்ரொபியான் ( Entropion)--கண் இமை மயிர், கண்ணுக்குள் புகுந்து
 கண்ணைக் குத்திக்கிழிக்கும் நோய்
  

  



No comments: